மட்டக்களப்பு காத்தான்குடியில் ‘சுகப்படுத்தும் சேவை’ எனும் அம்பியூலன்ஸ் சேவை தொடர்பாக மக்களுக்கு
விழிப்புணர்வு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அவசர நோயாளர்களுக்கான ‘சுகப்படுத்தும் சேவை’ எனும் அம்புலன்ஸ் சேவை தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு வேலைத்திட்டம் மட்டக்களப்பு காத்தான்குடியில் மேற்கொள்ளப்பட்டது.
காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்பாக இந்த விழிப்புணர்வு வேலைத்திட்டம் மேற் கொள்ளப்பட்டது.
இதன்போது இந்த சேவை வழங்கும் அதிகாரிகளினால் பொது மக்களுக்கு இந்த இலவச அம்புலன்ஸ் சேவை தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன் இரத்த அழுத்த பரிசோதனையும் நடைபெற்றது.
திடீரென ஒருவர் நோய்வாய்ப்படும்போது அவருக்கு முதலுதவி வழங்கி உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அவருக்கு சிகிச்சையளிக்கும் வகையில் இந்த சுகப்படுத்தும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளாகும் போதும் கர்ப்பிணித்தாய்மாருக்கு ஏற்படும் அவசர நிலையின் போதும் மாரடைப்பு உட்பட அவசர நிலைமையின் போதும் 1990 எனும் இலகத்துடன் தொடர்பு கொண்டு இந்த இலவச சேவையினை கட்டணமின்றி பெற்றுக் கொள்ள முடியும் என இதன் அதிகாரி தெரிவித்தார். (நி)