திருக்கோவில் பிரதேச மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டமைக்கு சாகாம குளத்தின் நீர் முகாமைத்துவம் இல்லாமயே காரணம்

அம்பாறை திருக்கோவில் பிரதேசமானது இயற்கை வளம் நிறைந்த பசுமையான பிரதேசமாகும் இங்கு வாழ்கின்ற சுமார் 33ஆயிரம் மக்கள் சனத்தொகையில் பெரும்பாலான மக்கள் விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்பு என தமது ஜீவனோபாய தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இவ் பாரிய நீர் இல்லாப் பிரச்சினை தொடருமானால் பொருளாதார ரிதியான வீழ்ச்சியை திருக்கோவில் பிரதேச மக்கள் எதிர் கொள்ள வேண்டும் என விவசாய அமைப்புக்கள் அச்சம் வெளியீட்டுள்ளன.

அந்தவகையில் இவ் மக்களுக்கான பாரிய நீர் தேவைகளை சாகாமம், கஞ்சிகுடியாறு மற்றும் றுபஸ் குளம் ஆகிய பாரிய நீர் ஏந்தும் இடங்களின் ஊடாக மக்களின் மேற்படி தேவைகளுக்கான நீரினை பெற்றுக் கொள்ள கூடியதாக இருக்கின்றன.

இந்நிலையில் றுபஸ், கஞ்சிகுடியாறு ஆகிய இரு குளங்களை விட திருக்கோவில் பிரதேசத்தில் 1872ல் குடியேற்ற அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சாகாமம் குளம் பாரிய முக்கியத்தவம் மிக்க நீரேந்து இடமாக அமைந்திருக்கன்றன. இதற்கு காரணம் சுமார் சாகாமம் குளத்தின் ஊடாக விவசாய அமைப்புக்களின் புள்ளிவிபரங்களின் படி 4770 கனையடி நீர் கொள்ளளவு சேமிக்கக் கூடியதாக உள்ள நிலையில் 16ஆயிரம் குடும்பங்களின் குடிநீருக்காக மாதாந்தம் 9.833 கனையடி நீர்தேவையை வழங்க வேண்டி நிலையில் ஒரு குளமாக சாகாம குளம் விளங்குவதுடன்

இந்த சாகாமம் குளத்தின் கீழ் ஊரக்கை, மொட்டயாகல், பட்டிமேடு வடக்கு, பட்டிமேடு தெற்கு, சேனைக்கண்டம் வடக்கு, தெற்கு என ஆறு கண்டகளைச் சேர்ந்த 3370 ஏக்கர் வேளாண்மை செய்க்கான நீர் மற்றும் 20ஆயிரம் கால்நடைகள், வனஜீவராசிகளின் குடிநீர், மற்றும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மீன்பிடி குடும்பங்களின் வாழ்வாதாரம் என திருக்கோவில் பிரதேசத்தின் ஒட்டுமொத்த மக்களின் பயன்பாட்டுக்குரிய குளமாக சாகாமம் குளம் முக்கியம் பெற்று வருகின்றன.

இவ்வாறு இருக்க அண்மைக்காலமாக சாகாமம் குளத்தில் இருந்து விவசாயம், குடிநீர், கால்நடைகளுக்கான குடிநீர் மீன்பிடி போன்றவற்றுக்கான போதிய நீர் இல்லையென்ற குறைபாடுகளை விவசாய அமைப்புக்கள் பொது மக்கள் ஆகியோரினால் முன்வைக்கப்பட்டு வருவதுடன்

இவ்வாறு தொடர்ந்தும் சாகாமம் குளத்தின் நீர் முகாமைத்துவத்தில் பிரச்சினைகள் ஏற்படுமானால் திருக்கோவில் பிரதேசத்தில் வாழ்கின்ற சுமார் 33அயிரம் மக்களும் பாரிய பொருளாதார மற்றும் சுகாதார ரீதியில் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என அச்சம் வெளியீட்டுள்ளதுடன்

இவ் குளத்தின் நீர் முகாமைத்தவம் தொடர்பான விவசாய ஆரம்ப கூட்டங்களை மீண்டும் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.(சி)

 

 

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!