முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிக்குட்பட்ட அம்பாள்புரம், ஆறாம்கட்டை, கொல்லவிளாங்குளம் ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து சீரின்மையால், மாணவர்கள் கடும் வெய்யிலில் கால்நடையாக நீண்டதூரம் பயணித்து, கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
நீண்டகாலமாக இங்கு நிலவிவரும் போக்குவரத்து சீரின்மை தொடர்பில், கடந்த வருடம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு,போக்குவரத்து ஒழுங்குகள் சீர்செய்யப்பட்டிருந்தது இந் நிலையில், மீண்டும் இங்கு நிலவிவரும் வீதிப் பிரச்சினையை காரணம் காட்டி, தற்போது பல மாதங்களாக போக்குவரத்துச் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கால்நடையாக பயணித்து கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.