திருக்கோவில் பிரதேச செயலாளராக தங்கையா கஜேந்திரன் நியமனம்!

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் உதவிப்பிரதேச செயலாளராக கடமையாற்றிய தங்கையா கஜேந்திரன் திருக்கோவில் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனத்தை பொதுச்சேவை ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய பொது நிருவாக அமைச்சு வழங்கியுள்ளதுடன் பதவியேற்பு நிகழ்வானது, 03ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1999.05.03 ஆம் திகதி பொது முகாமைத்துவ உதவியாளராக அரச கடமையில் இணைந்து கொண்ட இவர் அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தில் 9 வருடங்கள் கடமையாற்றினார். பின்னர் முகாமைத்துவ உதவியாளர் அதிசிறப்பு வகுப்பிற்கு தரமுயர்த்தப்பட்டு திருக்கோவில் மற்றும் நாவிதன்வெளி பிரதேச சபைகளின் செயலாளராகவும் பொறுப்பேற்று செயற்பட்டார்.

2011 இல் நடைபெற்ற இலங்கை நிருவாக சேவை அதிகாரி போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த அவர் 2012.01.02 இல் இலங்கை நிருவாக சேவை அதிகாரியாக பதவியுயர்வு பெற்று கிழக்கு மாகாண காணி உதவி ஆணையாளராகவும் பின்னர் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கடந்த மூன்றரை வருடங்களாக உதவிப்பிரதேச செயலாளராகவும் தனது சேவையை தொடர்ந்ததுடன் அரச சேவையில் 20 வருட அனுபவத்தினையும் பெற்றுள்ளார்.

மேலும் இலங்கை ராம் கராத்தே சங்கத்தின் 3ஆம் நிலை கறுப்பு பட்டியினை பெற்றுக்கொண்டதுடன் கராத்தே போதானசிரியராகவும் இலங்கை கராத்தே சங்கத்தின் நடுவர் சங்க உறுப்பினராகவும் இலங்கை பாடசாலை கராத்தே சங்கத்தின் பாடசாலை போதனாசிரியராகவும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பதவியுயர்வு பெற்றுள்ள அவருக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்துவரும் அதேநேரம் பாராட்டியும் வருகின்றனர்.
இதேவேளை திருக்கோவில் பிரதேச செயலாளராக பல வருடங்கள் சிறந்த சேவையாற்றிய எஸ்.ஜெகராஜன் காரைதீவு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.(மா)

Recommended For You

About the Author: Suhirthakumar

error: Content is protected !!