ஸ்மார்ட் போக்குவரத்துத்துறையில், எஸ்.எல்.எரி மூவ் திட்டம்

எஸ்.எல்.ரி குழுமம், இலங்கை சந்தையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் எஸ்.எல்.ரி. மூவ் ரைட் சியாரிங் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இலங்கையின் ஸ்மார்ட் போக்குவரத்தில், அதிக நம்பகமான பாதுகாப்பான மற்றும் வெளிப்படை வடிவமாக, எஸ்.எல்.ரி மூவ் அமையும் என்பதுடன், மொபிரெல் இணைப்பின் மூலம், எஸ்.எல்.ரி மூவ், கையடக்க தொலைபேசியில் இலவச டேரா வசதியையும் வழங்குகின்றது.

ஸ்ரீலங்கா ரெலிகொம் பி.எல்.சி தனது டிஜிட்டல் சேவை வழங்கும் துணை நிறுவனமான எஸ்.எல்.ரி டிஜிட்டல் இன்போ சேவிஸ் தனியார் நிறுவனம், எஸ்.எல்.ரி.டி.எஸ் மூலம் நாட்டின் சம்பிரதாய டெக்ஸி சேவைத்துறை மற்றும் நகர்வுச் சேவைகளை இணைத்து புரட்சி செய்துள்ளது.

எஸ்.எல்.ரி மூவ் என்ற வர்த்தகக் குறிப்பெயரின் கீழ், இலங்கை ரைட் சியாரிங் சேவைகளை வழங்க எஸ்.எல்.ரி டி.எஸ் முன்வந்துள்ளது.

இதன் நிகழ்வு, கொழும்பு தாமரைத் தடாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

இதன் போது, தனது புத்தாக்க சேவை பற்றிய அறிவிப்பை, எஸ்.எல்.ரி டி.எஸ் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

கொழும்பு நகர் மற்றும் மேல் மாகாணத்தில், ஒரு மாத காலம் வெற்றிகரமான பரீட்சார்த்த சேவையை வழங்கிய பின்னர், ஸ்மார்ட் போக்குவரத்து தளமான எஸ்.எல்.ரி மூவ் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எல்.ரி மூவ் செயலி, நாட்டில் தற்போதுள்ள ஏனைய இதனை ஒத்த சேவைக்கு இணையற்ற வகையில், தமது பரஸ்பரம் பயன் மிக்க கூட்டாண்மை ஒன்றை, தனது சாரதிகளுக்கு வழங்குவதை இலக்காக கொண்டுள்ளது.

அத்துடன், வாடிக்கையாளர்களுக்கு பொருளாதார பாதுகாப்பு மற்றும் நம்பகத் தன்மையுடனான சேவையையும் வழங்குகிறது.

இந்தத் துறையில், நியாயத்தன்மை, நம்பகத்தன்மை, தரம் மற்றும் பணத்திற்கான பெறுமதி ஆகிய சிக்கல்களை சரி செய்வதை, இந்த முயற்சி இலக்காக கொண்டுள்ளது.

சாரதி மற்றும் பயணிக்கான 24 மணி நேர உதவி மையத்துடன் வலுவான செயலி, வலுவான தனியுரிமை நெறிமுறைகள், சாரதி பயிற்சி வாகனங்களின் சுத்தம் மற்றும் பாதுகாப்பு மற்றும் பயணிகள் தமது போக்குவரத்து குறித்து, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பகிரும் வசதியை வழங்குவதன் மூலம், எஸ்.எல்.ரி மூவ் இந்த சவாலில் வெற்றி பெறுவதுடன், நியாயத்தன்மையை உறுதி செய்வதோடு, பகிர்வு பொருளாதார முயற்சிகளை ஊக்குவிக்கின்றது.

அடிப்படை இணைப்புகள் தொடக்கம், இன்றைய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறையை வேறுபடுத்தும் வளர்ச்சியடைந்து வரும் பயன்பாடுகள் வரை, 160 ஆண்டுகளுக்கு மேலாக, எஸ்.எல்.ரி குழுமத்தினால், நாட்டின் அனைத்து மக்களின் கனவுகளை நிறைவு செய்ய பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், எஸ்.எல்.ரி குழுமம் தொலைத்தொடர்பு சேவை வழங்குநரில் இருந்து, டிஜிற்றல் வழங்குநராக மாறுவதற்கான நிலைமாற்றப் பயணத்தில் ஈடுபட்டிருப்பதுடன், அது தேசத்தின் முன்னணி டிஜிற்றல் வாழ்வு முறை வழங்குநராக உருவெடுத்துள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!