அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு சுகாதார பணிமனையின் ஏற்பாட்டில் இன்று போதையில் இருந்து விடுதலையான தேசம் எனும் தொனிப்பொருளில் மக்களை விழிப்புணர்வூட்டும் திட்டம் இன்று கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.கணேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உளநலப்பிரிவு தொற்றா நோய்தடுப்பு வைத்திய அதிகாரி எம்.ஐ.எம்.எஸ்.இர்சாத் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து நற்பிட்பிட்டிமுனை கிட்டங்கி வீதியில் இவ் விழிப்புணர்வு செயற்திட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது வீதியில் பயணம் செய்த பாதசாரிகள், வாகனச்சாரதிகள் நிறுத்தப்பட்டு போதைப் பொருள் பாவனையின் விளைவு தொடர்பாகவும், வாகனச்சாரதிகள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள், போதையில் வாகனம் செலுத்துவதினால் ஏற்படும் பாதிப்புக்கள் என்பன தொடர்பாகவும் அறிவுறுத்தப்பட்டதுடன் துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்ட்டன.(சி)