நுவரெலியா நோர்வுட் பிரதேச சபை மாற்றிடத்தில்!

நுவரெலியா நோர்வுட் பிரதேச சபையின் நடவடிக்கைகள், பொகவந்தலாவ டின்சின் கலாசார மண்டபத்தில், இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபை தலைவர் ரவிகுழந்தை வேலினால், கட்டடம் திறந்து வைக்கப்பட்டு, சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் போது, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் நோர்வுட் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, நோர்வுட் பிரதேச சபையை பொகவந்தலாவ டின்சின் கலாசார மண்டபத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ள, ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபையினர், வர்த்தகர்கள், பொது மக்கள் பலர் இனைந்து, நேற்று சத்தியாக்கிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஒன்றரை வருட காலமாக, டிக்கோயா புளியாவத்தை நகரில் உள்ள வாசிகசாலை ஒன்றில், நோர்வுட் பிரதேச சபை இயங்கி வந்த போதிலும், இடப்பற்றாக்குறை காரணமாகவே, தற்காலிமாக ஒரு வருட குத்தகை அடிப்படையில், பொகவந்தலாவ டின்சின் கலாசார மண்டபத்தை, நோர்வுட் பிரதேச சபை பொறுப்பேற்று, நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், புதிய சபை ஒன்றை வெகு விரைவில் நோர்வுட் பகுதியில் அமைக்கும் வரை, பிரதேச சபை இந்த கலாசார மண்டபத்தில் இயங்கும் என்றும், பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!