நுவரெலியா அக்கரபத்தனை பெருந்தோட்ட யாக்கத்தின் கீழ் இயங்கும், தோட்டங்களின் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக, இலங்கை தொழிலாளர்
காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அக்கரபத்தனை பெருந்தோட்ட யாக்கத்தின் நிறைவேற்று அதிகாரி, தோட்ட முகாமையாளர்கள், தோட்ட கமிட்டி தலைவர்கள், தலைவிமார்கள், வாலிப காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்களுக்கு இடையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
இதன் போது, தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.(சி)