கடும் வறட்சியால் வற்றிக்கொண்டு போகும் தில்லையாறு

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பனங்கட்டு பாலம் என்று அழைக்கப்படும்தில்லையாறானது தெடரும் கடும் வரட்சி காரணமாக படிப்படியாக வற்றி செல்கின்றமையை காணக் கூடியதாகஉள்ளது.

தில்லையாற்றில் மேற்குப்புறப்பகுதியில் சுமார் 200 மீற்றர் தூரம் முற்றாக நீர் வற்றப்பட்டு காட்சியளிப்பதுடன்ஆற்றின் கரேயார பிரதேசங்கிலும் நீர் படிப்படியாக வற்றப்பட்டு வருகின்றமயை காணக்கூடியதாகவுள்ளது.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஒன்பது மீன் பிடி சங்கங்களை கொண்ட சுமார் ஆயிரத்தி நானுறு (1400)குடும்பங்கள் காணப்படுகின்றன.

இக் குடும்பங்கள் தில்லையாற்றினுடாக தங்களது ஜீபனோபாயத்தினை நம்பி வாழ்க்கை நடத்தும் குடும்பங்களாககாணப்படுகின்றனர்.

தற்போது நிலவும் வறட்சியால் தில்லையாறு வற்றிக் கொண்டுவருகின்றது இதனால் குறித்த மீனவ குடும்பங்களின்வாழ்வாதார நிலைகோள்விக்குறியாக மாறக் கூடிய நிலமையாகவுள்ளது.

இருப்பினும் கடந்தகால வறட்சி நிலமைகளின் போதிலும்; தில்லையாறானது வற்றிகாணப்படாமையும் தற்போதுதில்லையாறானது வற்றிக் கொண்டு செல்வதும் குறிப்பிடத்தக்கது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!