மணல் கொண்டுசெல்வதால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, மட்டு. வேப்பவெட்டுவானில் மக்கள் கவனயீர்ப்பு

மட்டக்களப்பு இலுப்படிச்சேனை வேப்பவெட்டுவான் வீதியில் மணல் ஏற்றும் கனரக வாகனங்கள் பயணிப்பதனால்அந்த வீதி சேதமடைவதாகத் தெரிவித்து பொதுமக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவடிஓடை மற்றும் காரைக்காடு போன்ற பிரதேசங்களில் மணல் ஏற்றுவதற்காக தினமும் நூற்றுக்கணக்கானகனரக வாகனங்கள் இவ்வீதியால் பயணிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த வீதியினை புனரமைப்புச் செய்யப்படும்வரை கனரக வாகனங்கள் பயணிப்பது தடைசெய்யப்படவேண்டும்என்பது இம்மக்களின் கோரிக்கையாகும்.

சேதமடைந்த நிலையிலுள்ள இவ்வீதியில் கனரக வாகனங்கள் வேகமாகப்பயணிக்கும்போது வெளியாகும்புழுதியினால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாவதாகதெரிவிக்கப்படுகிறது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!