பொத்துவில் பிரதேச செயலகத்தில் அரசகரும மொழிகள் தின நிகழ்வுகள்

அரச கரும மொழிகள் கொள்கைய நடைமுறைப்படுத்தலை வலுப்படுத்தும் நோக்கில் அரச கரும மொழிகள் தினம் மற்றும் அதற்கு இணையாக அரச கரும மொழிகள் வாரத்தினை அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.

அதற்கு அமைவாக இன்று அம்பாறை பொத்துவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ்  தலைமையில் செயலக கேட்போர் கூடத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

இத் தினமானது தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்னேற்ற இந்து சமய அலுவல்கள் அமைச்சின் ஊடாக அரச திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான அரச கரும மொழிகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்கள் வழங்கப்பட்டு இருந்தன.

இலங்கை அரசியலமைப்பின் 1978ஆம் ஆண்டு ஐஏ ஆம் அத்தியாயத்தின் ஊடாக இலங்கையின் அரச கரும மொழிகள் குறித்த அடிப்படை சட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் 13 மற்றும் 16ஆம் உறுப்புரைகளின் திருத்தங்கள் ஊடாக சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

அதற்கு அமைவாக சிங்களம் மற்றும் தமிழ் மொழிகள் அரசகரும மொழிகளாகவும் ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கு அமைவாக இலங்கையில் அரசகரும மொழிக் கொள்ளையை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு 2018.12.28 திகதிய விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்னேற்ற இந்து சமய அலுவல்கள் அமைச்சு தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று ஜுலை முதலாம் திகதி முதல் ஒருவார காலம் அரச கரும மொழிகள் தினம் மற்றும் அதற்கு இணையாக அரச கரும மொழிகள் வாரத்தினை அரசு பிரகடனப்படுத்தியுள்ளன.

இதனடிப்படையில் இன்று பொத்துவில் பிரதேச செயலகத்தில் வாரத்தின் முதலாம் நாள் நிகவுகள் இடம்பெற்று இருந்ததுடன் சிங்கள மொழி பயிற்சிகளை பூர்த்தி செய்த பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு பிரதேச செயலாளரால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டு இருந்தன.

நிகழ்வில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ், சமூர்த்தி தலைமை முகாமையாளர் வி.அரசரெத்தினம், தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பாளர் எல்.ஏ.சீ.அனுறுத்த மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.(சி)

 

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!