வவுனியா பிரதி விவசாய பணிப்பாளரை தான் தாக்கியதாக, ஊடகங்களில் தனது சுய கௌரவத்தை பாதிக்கும்வகையில் வெளியான செய்திகளை மறுத்துள்ள முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் பூ.உகநாதன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சிலர் உண்மையை மறைக்க ஊடகங்களை பிழையாகவழிநடத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட விவசாய திணைக்களத்தில் இன்று காலை நடாத்திய ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.(சி)