தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வார நிகழ்வு பருத்தித்துறையில்

வடமராட்சி, பருத்தித்துறையில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இருந்து ஆரம்பமான போதை ஒழிப்பு நடைபவனி மந்திகையிலுள்ள பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வரை இடம்பெற்றது.

குறித்த நடைபவனியில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

நடைபவனியில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.சுகிர்தன், பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை ஊழியர்கள், பிரதேச செயலக மருத்துவ துறை ஊழியர்கள், வடமராட்சி கல்விஉத்தியோகத்தர்கள், வலய கல்வி அலுவலக ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

போதைப்பொருள் மனிதனுக்கு கேடு என தெரிந்தும் சிலர் அதனை பயன்படுத்தி, அதிலிருந்து மீள முடியாதுதுன்பப்படும் நிலமை போதைப்பொருளின் பாதகத்தை வெளிக்காட்டுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இருந்து ஆரம்பமான போதை ஒழிப்பு நடைபவனி மந்திகையிலுள்ள பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை நிறைவடைந்திருந்த நிலையில், அங்கு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தின் இறுதி நாள் நிகழ்வினை பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை, வடமராட்சி வலயக் கல்வி அலுவலகம், வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் ஆகியன இணைந்து நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!