நீராவியடிப் பிள்ளையார் ஆலய, தமிழர் திருவிழா எதிர்வரும் சனிக்கிழமை

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் தமிழர் திருவிழாவாக, எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

இதேவேளை, செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை ஆற்றிவரும் இந்து மக்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என பௌத்த மதகுரு ஒருவர் சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்துவருவதாக, நீராவியடி பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினர் குற்றம்சுமத்தியுள்ளனர்.

அத்தோடு, நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலைமைகள் காரணமாக 2009 ஆம் ஆண்டு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள முடியாதவாறு இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது அவ்விடத்திலிருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ள நிலையில் நாங்கள் குறித்த ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டுவருகின்றோம்.

இந்நிலையில் அங்கு தங்கியுள்ள பௌத்த மதகுரு ஒருவர் வழிபாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்திவருகின்றார் எனவும் ஆலய பரிபாலனசபையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை, குறித்த நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் 6 ம் திகதி வருடாந்த பொங்கல் உற்சவம் சிறப்புற இடம்பெறவுள்ளதாகவும் இதன்போது கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு வளர்ந்து நேர்ந்து பொங்கல் பொங்கி மடை பரவி உற்சவம் இடம்பெறவுள்ளதோடு விசேடமாக அன்றைய தினம் 108 பொங்கல் பானை வைத்து பொங்கல் இடம்பெறவுள்ளதாகவும் ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!