மரண தண்டனைக்கு ஆதரவு வழங்க முடியாது : ரணில்

ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளில் உயிர்க் கொலைகளுக்கு இடம் கிடையாது எனவும், எந்தக் காரணத்திற்காகவும், மரண தண்டனையை அமுல்படுத்த ஆதரவு வழங்க முடியாது எனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இன்று, மொனராகலை மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசியலமைப்பில் மரண தண்டனை தொடர்பான சட்ட ஏற்பாடுகள் காணப்பட்டாலும், வரலாற்றில் எந்த தலைவர்களும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை.

2016 இல், ஐக்கிய நாடுகள் சபை மரண தண்டனையை தடை செய்வதற்கான யோசனையை முன்வைத்த போது, அதற்கு இலங்கையும் இணக்கம் தெரிவித்துள்ளது.

அந்த யோசனைக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் நானும், அன்று ஆதரவளித்திருந்தோம்.
என குறிப்பிட்டார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!