முல்லை. வவுனிக்குளத்தில் நீர் இல்லை : விவசாயிகள் குற்றச்சாட்டு

முல்லைத்தீவு வவுனிக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள, சிறுபோகச் செய்கைக்கு விநியோகிப்பதற்கு, போதியளவு நீர் இருப்பதாக, பிரதி நீர்ப்பானப் பொறியியலாளர் ந.சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

வவுனிக்குளத்தின் கீழ் இந்த ஆண்டும் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோகச் செய்கைக்கு, உரிய முறையில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படாமையினால், தங்களுடைய பயிர்கள் அழிவடையும் நிலையில் இருப்பதாக, விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனிக்குளத்தின் கீழுள்ள, செல்வபுரம் முதலாம் வாய்க்கால், இரண்டாம் வாய்க்கால் போன்ற பகுதிகளில், பெருமளவான வயல் நிலங்கள் நீர் விநியோகம் இன்றி கருகிய நிலையில் காணப்படுகின்றது.

இதேவேளை, பொன்னகர், கரும்புள்ளியான் போன்ற பகுதிகளிலும், இவ்வாறு நீர் இன்றி கருகிய நிலையில் பெருமளவான வயல் நிலங்கள் காணப்படுகின்றன. இதனால் விவாயிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், கூட்டத்தில் எடுக்கப்பட்ட அளவை விட,அதிகளவான நிலப்பரப்பில் இப்பயிர்ச் செய்கை மேற்கொண்டுள்ளதனால் இவ்வாறு நீர் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக, விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சிறுபோகச் செய்கைக்கு உரிய முறையில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும், நீர் விநியோகிக்கும் உத்தியோகத்தர், குறிப்பிட்ட சில பகுதிகளில், பாரபட்சமாக நடந்து கொள்வதாலும், அதனால் இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்;படுவதாகவும், குறித்த உத்தியோகத்தரை இடமாற்றம் செய்து, வேறு ஒரு உத்தியோகத்தரை நியமிக்குமாறு, 200 ற்கும் மேற்பட்ட விவசாயிகள் கையொப்பமிட்ட கடிதத்தினை, நீர்ப்பாசன திணைக்களத்திடம் வழங்;கவுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறிப்பிட்டுள்னர்.

இது தொடர்பில், வவுனிக்குளம் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, வவுனிக்குளத்தில் 6 ஆயிரத்து 60 ஏக்கர் நிலப்பரப்பில் காலபோகச் செய்கை மேறகொள்ளப்பட்டாலும், குளத்தின் அளவைக் கொண்டு, இம்முறை 3 ஆயிரத்து 400 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோகச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதில், மேலதிக விதைப்புக்கள் தொடர்பில், கமநல அபிவிருத்தி திணைக்களமே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குளத்தில் இருக்கின்ற நீர் சிறுபோகச் செய்கைக்கு போதுமானதாக இருந்தாலும், தற்போதைய வெப்பம் காற்று காரணமாக, நீரின் ஆவியாதல் தன்மை அதிகரித்துக் காணப்படுகின்றது. விவசாயிகளும் நீரைச் சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

உத்தியோகத்தர் மீது உள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், முறைப்பாடுகள் கிடைக்குமிடத்து, அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

என வவுனிக்குளம் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் ந.சிறிஸ்கந்தராஜாவிடம் வினவிய போது, வவுனிக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறு போகச் செய்கைக்;கு விநியோகிப்பதற்கு போதியளவு நீர் இருப்பதாக குறிப்பிட்டார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!