மஸ்கெலியாவில், பிரதான வீதியின் ஒரு பகுதி பாதிப்பு!

நேற்று காலை முதல் பெய்த கடும் மழை காரணமாக, நுவரெலியா மஸ்கெலியா பகுதியில், ஒரு வழிப் போக்குவரத்திற்காக பயன்படுத்தும் வீதியின் ஒரு பகுதி, சரிந்து விழுந்துள்ளது.இவ்வாறு மண் சரிந்து விழும் காட்சி, கமெராவில் பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியில், ஒரு வழிப் போக்குவரத்து வீதி சரிந்து விழுந்துள்ளமையால், அருகாமையில் உள்ள குடியிருப்புகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என, மஸ்கெலியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், சாரதிகளையும் பொது மக்களை, மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு, பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!