நல்லாட்சியில் மோசடி : ரோஹித

நல்லாட்சி அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளிலும் ஏதாவது ஒரு மோசடிகள் இடம்பெற்றுள்ளமை நேற்றைய தினம் மங்கள சமரவீர வழங்கிய வாக்கு மூலத்திலிருந்து தெரியவந்துள்ளதென முன்னாள் பாராளுமனர் உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்பொதுஜன பெரமுனாவின் தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

கடந்த தேர்தலின் போது அரச பேருந்துகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமைக்காக நேற்றைய தினம் மங்கள சமரவீர குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைக்குற்படுத்தப்பட்டு வாக்கு மூலம் ஒன்றையும் வழங்கியிருந்தார், உண்மையில் நல்லாட்சி அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளிலும் ஏதாவது ஒரு மோசடிகள் இடம்பெற்றுள்ளமை தெளிவாகிறது

மக்களின் சேவகனாகவே மக்கள் இவ்வாறானவர்களை தெரிவு செய்தார்கள் ஆனால் இவர்கள் செய்த செயற்பாடுகள் அனைத்தும் மிகவும் கீழ்தரமானவையே, இது உண்மையில் பௌத்த மதத்தையும் இழிவுபடுத்துவது போன்ற ஒரு செயலாகும், இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான ஒருவரே மங்கள சமரவிரவாகும், இவ்வாறான ஒரு பௌத்த மதத்தை இழிவாக்கியவைரையே சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியின் பிரதானமானவறொருவராவார்

மேலும் கொரோனா வைரஸ் இன்று பாரிய உலக பிரச்சனையாகி வரும் நிலையில், இலங்கையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் எமது அரசாங்கம் சிறப்பான பல வேலை திட்டங்ககளை முன்னெடுத்து வருவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம், பல வளர்ச்சியடைந்த நாடுகளின் தொற்றாளர் விகிதம் மற்றும் இறப்போர் விகிதம் அதிகரித்து வரும் நிலையில் இலங்கையில் இவ்விரண்டும் முறையாக கையாளப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நாம் சுகாதார சேவையில் ஈடுபட்டவர்கள், முப்படையினர் மற்றும் நாட்டு மக்களுக்கும் எமது நன்றிகளை கூறக் கடமைப்பட்டுள்ளோம், நிச்சயமாக நாட்டு மக்கள் அனைவரின் ஒத்துழைப்புக்களும் அளப்பரியதாகும், ஒவ்வொரு சிக்கலான நிலைமையின் போதும் அரசினால் பெற்றுக்கொடுக்கப்படும் ஆலோசனைகள் மற்றும் சுகாதார பழக்கவழக்கங்களை பின்பற்றி கொரோனாவிற்கெதிரான போரில் மக்கள் பெரும் பங்காற்றியுள்ளனர் என்றும் இதன் போது அவர் தெரிவித்தார்

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!