ஹட்டனில் மண்சரிவு ஏற்பட்டதால், 21 பேர் இடம்பெயர்வு!

மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.அடை மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால், நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் தோட்டப் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால், 6 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

அவர்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, செனன் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை, அம்பகமுவ பிரதேச செயலகத்தின் ஊடாக, தோட்ட கிராம உத்தியோகத்தர் வழங்கிவருகின்றார்.

தோட்டத்தில் ஒரு வீடு மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. அதனையடுத்து, அப்பகுதியில் மண்சரிவு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையால், அபாய வலயத்தில் இருந்த 6 குடும்பங்களும் வெளியேற்றப்பட்டுள்ளன.

மலையகத்தில், இன்று காலை வேளை கன மழை பெய்யாத போதிலும், அடுத்து வரும் நாட்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளதால், தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!