ஜூன் 20இல் தேர்தல் நடத்த முடியாது : தேர்தல்கள் ஆணையகம்!

நாடாளுமன்றத் தேர்தலை, ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்த முடியாது என, தேர்தல்கள் ஆணையாளர், உயர் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களும், மேலும் தேர்தலை தாமதப்படுத்தியுள்ளதாகவும், தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையாளர் மேலும் நீதிமன்றத்தில் தெரிவிக்கும் போது, தேர்தல் தாமதம் தொடர்பில், ஜனாதிபதி, உயர் நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை பெற்றுக்கொள்வது நல்லதென, ஜனாதிபதியின் செயலாளருக்கு தெரிவித்ததாக, நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

தேர்தல் ஆணையாளரின் கருத்துக்கு பதிலளித்த ஜனாதிபதியின் செயலாளர், ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தைப் பெற்றுக் கொள்ளும் எண்ணமில்லை என பதிலளித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், முன்னரே திட்டமிட்டபடி, தேர்தலை ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்த முடியாது எனத் தெரிவித்தார்.

சுகாதாரத் திணைக்களத்தின் அனுமதி கிடைத்த பின்னர், 9 தொடக்கம் 11 வாரங்கள், தேர்தல் ஆணையாளருக்கு, தேர்தல் ஆயத்தங்களை செய்வதற்கு தேவையாக இருக்கும்.

அத்துடன், நாட்டில் சில மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக, மக்களின் நடமாட்டம், வேலை நேரமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!