வெளி மாவட்டங்களுக்கு பயணிக்க அனுமதி!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய வெளி மாவட்டங்களுக்கு பயணிக்க இன்று முதல் அனுமதி வழங்கியுள்ளதாக பிராயாணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.அந்தவகையில் அரச மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பிரயாணிகளுக்காக போக்குவரத்து சேவையினை பிராயாணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு ஆரம்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து யாழ்ப்பாணம் மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு தற்போது போக்குவரத்து சேவையினை இலங்கை போக்குவரத்து சாலையின் மட்டக்களப்பு, கல்முனை பேருந்து சாலைகள் ஆரம்பித்துள்ளதாக மட்டக்களப்பு சாலை நேரகட்டுப்பாட்டாளர் எம்.ராஜதுறை தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லவுள்ள பிரயாணிகள் தங்கள் செல்லவுள்ள காரணத்தின் ஆவணங்களுடன், சுகாதார வைத்திய அதிகாரிகளின் வைத்திய சான்றிதழ்களை காண்பித்து முன்கூட்டியே ஆசனங்கள் பதிவு செய்யப்பட்டு பின்னரே வெளிமாவட்டங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண பிராந்திய செயலாற்று முகாமையாளர் எம்.ஏ.உவைஸ் தெரிவித்தார்.

அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டத்திற்கான தனியார் போக்குவரத்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என மட்டக்களப்பு தனியார் போக்குவரத்து சேவை நேர கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார்.

இன்று முதல் வெளிமாவட்டங்களுக்கு போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் பயணிகளின் வருகை குறைவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!