நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி!

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்ரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 37 ஆவது லீக் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த அவுஸ்ரேலிய அணி, நிதானமான துடுப்பாட்டத்தையே போட்டி முழுவதும் வெளிப்படுத்தியது.

இதனடிப்படையில், அவுஸ்ரேலியா அணி 50 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 9 இலக்குகளை மாத்திரம் இழந்து 243 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

244 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, அவுஸ்ரேலியாவின் பந்து வீச்சில் ஓட்டங்களை பெற்றுக்கொள்வதற்கு தடுமாறியது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதனடிப்படையில், 44 ஆவது பந்துப்பரிமாற்றம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, 157 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் இழந்து 86 ஓட்டங்களால் நியூசிலாந்து அணி தோல்வியடைந்தது.

இதனால், 43.4 ஒவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களை மட்டுமே நியுஸிலாந்து அணி பெற்றுக்கொண்டது.

இதன்மூலம் அவுஸ்ரேலியா 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளது. (நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!