வெள்ளப்பெருக்கால் பாதிப்படைந்த வீடுகளை சுத்தமாக்கும் மக்கள்!

நுவரெலியா பொகவந்தலாவ சாமிமலை ஓல்டன் கீழ் பிரிவு தோட்டப்பகுதியில் வெள்ளப்பெருக்கினால்
பாதிக்கப்பட்ட மக்கள், தமது குடியிருப்புகளைச் சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.மஸ்கெலிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாமிமலை ஓல்டன் கீழ்ப்பிரிவு திட்ட பகுதியில் நேற்றைய தினம் பெய்த அடை மழையால்
சாமிமலை கல்தோனி ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக 30 குடியிருப்புக்குள் வெள்ளநீர் உட்புகுந்தமையால் 102பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

வெள்ள நீரில் பாதிக்கப்பட்ட மக்களுடைய உடமைகள் மற்றும் அடையாள அட்டை பிறப்புச் சான்றிதழ் போன்ற ஆவணங்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

அத்தோடு வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்பட்ட கால்நடைகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இன்றைய தினம் பாதிக்கப்பட்ட மக்கள் தத்தமது குடியிருப்புகளுள் தேங்கி நிற்கும் கழிவுகளையும் சேறுகளையும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

சாமிமலை ஆற்றடி பிள்ளையார் ஆலயம் வெள்ளநீரில் முழுமையாக மூழ்கியதனால், தோட்ட நிர்வாகத்தினூடாக கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 2 குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சிறுவன் ஒருவன் காயமடைந்த நிலையில், மஸ்கெலிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!