வவுனியாவில் சுகாதாரத் தரப்பினர் விசேட நடவடிக்கை!

வவுனியா சுகாதார திணைக்களத்தினர், வவுனியா மன்னார் வீதி மற்றும் கொறவப்பொத்தான வீதிகளில் நடைபாதைகளில் அமர்ந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களிடம் விசேட சோதனைகளை முன்னெடுத்திருந்தனர்.இதன்போது கொரனா தொற்று பரவாமல் தடுப்பதற்கான முறைகள் தொடர்பாக வியாபாரிகளிற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டதுடன், நிலத்தில் வைத்து மரக்கறி விற்பனை செய்வதற்கு முற்றாகத் தடையும் விதிக்கப்பட்டது.

மரக்கறிகளை உயரமான இடத்தில் வைத்து விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

அறிவுறுத்தல்களை மீறுபவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையில் பொதுசுகாதார பரிசோதகர்கள் இராணுவத்தினர் பொலிஸார் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!