யாழிலிருந்து தூர இடங்களுக்கான பேருந்து சேவை ஆரம்பம்!

யாழ்ப்பாணம் – திருகோணமலைக்கான பேருந்து சேவைகள் இன்று முதல் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு இடையேயான பேருந்து சேவை நாளை முதல் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் – கோண்டாவில் சாலையின் இரண்டு பேருந்துகள் காலை 6.30 மற்றும் காலை 7.30 ஆகிய நேர அட்டவணையில் நாளை முதல் மட்டக்களப்பிற்கான சேவையை ஆரம்பிக்க உள்ளன.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!