மலையகத்தில் நீடிக்கும் சீரற்ற காலநிலை!

மலையகத்தில் நிலவும் சீரரற்ற காலநிலையால், நுவரெலியா அக்கரப்பத்தனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில், 42 குடும்பங்களைச் சேர்ந்த 162 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.லிந்துலை எகமுதுகம பகுதியில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேரும், ராணிவக்த பகுதியில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேரும், பேர்ஹம் தோட்ட பகுதியில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இடம்பெயர்ந்தவர்கள் அந்தந்த தோட்டங்களில் உள்ள பாதுகாப்பான இடங்களில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குத் தேவையான உணவு உட்பட அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை பிரதேச சபை முன்னெடுத்துள்ளதாக தவிசாளர் எஸ்.கதிர்ச்செல்வன் தெரிவித்தார்.

எகமுதுகம பகுதியில் வீடொன்றின் மீது பாரிய மண்மேடொன்று சரிந்து விழுந்த நிலையில், வீட்டிலிருந்த 9 பேர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!