மெக்ஸிகோ எல்லையில் சுவர் அமைப்பதற்கு இராணுவ நிதியை பயன்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அமெரிக்க நாட்டுக்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் வருவதை தடுப்பதற்கு கலிபோர்னியா அரிசோனா மற்றும் மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் அமைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்தார்.
எனினும், தடுப்புச் சுவர் அமைப்பதற்கு நிதியை ஒதுக்க அமெரிக்க பாராளுமன்றில் ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து அவசர நிலையை அறிவித்த டொனால்ட் ட்ரம்ப், இராணுவ நிதியை பயன்படுத்தி தடுப்புச் சுவர் அமைப்பதற்கான முயற்சிகளை ஆரம்பித்தார்.
தடுப்புச் சுவர் அமைப்பதற்கான நிதியை வழங்க அமெரிக்க இராணுவம் ஒப்புக் கொண்டதை எதிர்த்து மத்திய நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஹேவூட் எஸ்.கில்லியம், தடுப்புச் சுவர் அமைப்பதற்கு இராணுவ நிதியை பயன்படுத்த தடை விதித்துள்ளார். (நி)