வெள்ள அபாய எச்சரிக்கை!

களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், இரத்தினபுரி மற்றும் மில்லகந்த ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ள காரணத்தினால் நோர்வூட் மற்றும் ஹொலம்புவ ஆகிய பகுதிகளுக்கும், ஜின் கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில் தவலம பகுதிக்கும், மஹாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளமையினால் நாவலபிட்டிய பகுதிக்கும் இவ்வாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நில்வள கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், பானதுகம, பிட்டபெத்தர மற்றும் உரவ ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்பாசனத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொத்மலை ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!