அக்கரைப்பற்றில் உயர்தர மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெளிவூட்டும் கருத்தரங்கு!

மாணவர்களின் கல்வி நடவடிக்கையினை ஆரம்பிக்கும் முகமாக நோய்த்தொற்று இல்லாத பிரதேசங்களின் பாடசாலைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.இதற்கமைவாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள சாத்தியமான பாடசாலைகளும் திறக்கப்படவுள்ளதுடன் முதற்கட்டமாக உயர்தர மாணவர்களின் கற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன் ஒரு கட்டமாக திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை உயர்தர மாணவர்களின் பெற்றோர்களை தெளிவூட்டும் கருத்தரங்கு நேற்று பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் கே.சுமன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் கலந்து கொண்டு பெற்றோர்களுக்கான விழிப்பூட்டல் கருத்துக்களை வழங்கினார்.

பாடசாலைக்கு மாணவர்களை அனுப்ப வேண்டிய முறைகள் மற்றும் பாடாசாலையில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் பாடசாலை நிர்வாகம் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் தொடர்பாகவும் விளக்கினார்.

மேலும் வகுப்பறைகளை ஒழங்குபடுத்த வேண்டிய விதம் மற்றும் முகக்கவசம் பாவிக்கவேண்டிய விதிமுறை கரங்களை சுத்தம் செய்வதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்தார்.

இதேவேளை அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்திற்குட்பட்ட ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மற்றும் ஸ்ரீ இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலயம், கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளும் திறக்கப்படவுள்ளதுடன் முதற்கட்டமாக உயர்தர மாணவர்களின் கற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!