யாழ்.அராலியில் பெண் தலைமைத்துவக் குடும்பத்திற்கு வீடு கையளிப்பு!

யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி ருவான் வணிகசூரியவின் எண்ணக்கருவுக்கு அமைய, யாழ்ப்பாணத்தில், பெண் தலைமைத்துவ குடும்பமொன்றிற்கு, இராணுவ வீரர்களின் நிதிப்பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு, இன்று கையளிக்கப்பட்டுள்ளது.இராணுவத்தினரின் சமூக சேவைகளில் ஒன்றான, வீட்டுத்திட்டம் அமைத்து வழங்கும் பணியில் இராணுவ வீரர்களின் நிதி பங்களிப்பில்
ஜே-160 அராலி பகுதியில் வதியும், பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்காக அமைக்கப்பட்ட வீடே இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட கட்டளைத் தலைமையக நலன்புரி நிதியத்தின் நிதிப் பங்களிப்பில், சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியில் இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, குறித்த வீட்டு உரிமையாளர்களின் தேவைகருதி, குழாய்க் கிணறு ஒன்றும் அமைத்து வழங்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி ருவான் வணிகசூரிய பிரதம அதிதியாக கலந்துகொண்டு, இவ்வீட்டினைக் கையளித்திருந்தார்.

இந்நிகழ்வில், 513 பிரிகேட் 11சிஎல்ஜ பிரவின் பிரிகேடியர் மற்றும் இராணுவ கட்டளை அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில், தெரிவு செய்யப்பட்ட பொதுமக்களுக்கு, இராணுவ வீரர்களின் நிதிப் பங்களிப்பில் 250ற்கு மேற்பட்ட வீடுகள் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!