இலங்கைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை – பாதுகாப்புச் செயலாளர்

இலங்கைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதாக குறிப்பிடப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என்றும், தீவிரவாத சக்திகளால் இலங்கைக்கு அச்சுறுத்தல்கள் உள்ளதாக சமூக ஊடகங்களில் உலாவ செய்வதன் மூலம் பொதுமக்களிடம் தவறான தகவலை பரப்ப வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.கொரோனா வைரஸ் தொற்று நோயப்; பரவலை கட்டுப்படுத்துவதில் படையினரும், பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்ட போதிலும் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ், ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்ட அனைத்து புலனாய்வு அமைப்புகளும், உள்ளக மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் உஷார் நிலையில் இருப்பதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பை கருத்தில் கொள்ளும் அதேவேளை, வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க குறித்த எண்ணிக்கையிலான இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

‘இலங்கை கடற்படை, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த போராடுகையில், உள்நாட்டில் மற்றும் சர்வதேச அளவில் செயல்படும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கண்காணிக்கும் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்துகிறது.

இராணுவம் மற்றும் பொலிஸ் ஆகியன திட்டமிடப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்துவதிலும் பயங்கரவாதத்தின் எந்த ஒரு வடிவத்தையும் எதிர்கொள்வதிலும் ஈடுபட்டுள்ளது’ என்றும் அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!