அம்பன் சூறாவளி – இலங்கையை விட்டு நீங்கும் வாய்ப்பு!

அம்பன் சூறாவளி மேலும் வலுவடைந்து வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இலங்கையை விட்டு விலகி நகர்ந்து, இன்று பிற்பகல் அளவில் மேற்குவங்கக்கரை நோக்கி நகரக் கூடிய சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று காலை வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்புக்களிலேயே இவ் விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு, அம்பன் சூறாவளியின் தாக்கம் காரணமாக தென், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதியில், குறிப்பாக நுவரெலியா, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழைபெய்யும் வேளைகளில், அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!