ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 660 பேர் கைது!

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 660 பேர், 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 256 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 60,425 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!