அவுஸ்திரேலியாவில், பழமை வாய்ந்த டைனோசர் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் 11 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரிதான பல் இல்லாத டைனோசரின் எலும்புகூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மெல்போர்ன் அருங்காட்சியகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் படிமத் தேடல் நிகழ்வில் கலந்துகொண்ட ஜெசிகா பார்கரால் என்ற தன்னார்வலர் இதனைக் கண்டுபிடித்துள்ளார்.

‘எல்பிரோசர்’; எனப்படும் அந்த டைனோசரின் பெயருக்கு லேசான பாதம் கொண்ட பல்லி என்று பொருள். அந்தப் படிமத்தை ஆராய்ந்தபோது அதற்கு நீண்ட கழுத்துகளும், சிறியளவிலான கைகளும், லேசான உடல்வாகும் இருந்தது தெரியவந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த டைனோசர் 2 மீட்டர் உயரத்தில் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் இதற்கு முன்னர் தான்சானியா மற்றும் சீனாவில் கிடைத்த படிமங்கள் 6 மீட்டர் நீளம் வரை இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வகையான எல்பிரோசர் டைனோசர்கள் வளர்ந்த பிறகு அதிகளவிலான இறைச்சியை உட்கொள்ளாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அர்ஜென்டினாவின் தெற்குப் பகுதியில் உள்ள சாண்டா குரூஸ் மாகாணத்தில் 7 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புக்கூட்டை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மெகரொப்டர் என அழைக்கப்படும் இந்த வகை டைனோசர்கள் பூமியில் வாழ்ந்த டைனோசர்களின் கடைசி இனமாக இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!