ரஷ்யாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 3 இலட்சத்தை நெருங்கியது!

ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு ஒரு நாளில் பாதிப்பு விகிதம் 10 ஆயிரமாக இருந்து வரும் நிலையில் கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்த ரஷ்ய ஜனாதிபதி புதின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறார்.இந்தநிலையில் ரஷ்யாவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 3 இலட்சத்தை நெருங்கியுள்ளது.

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 263 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2 இலட்சத்து 99 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதேவேளை 115 பேர் உயிரிழந்தமையைத் தொடர்ந்து, உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 837 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து 76 ஆயிரத்து 130 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் ரஷ்ய செய்திகள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!