பொதுத் தேர்தல் – மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை இன்று!

பொதுத் தேர்தலுக்கான திகதியை சவாலுக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை, இன்று காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில், குறித்த மனுக்கள் மீது, நேற்றும் விசாரணைகள் இடம்பெற்றன.

இதன்போது, மனுதாரர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி ஒருவர், தனது சமர்ப்பிப்புக்களில், மக்கள் உரிமையையும் அவர்களின் இறையாண்மையையும் பாதுகாக்கவே, மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தை நாடியதாகக் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால், நாட்டில் நிலவும் சூழ்நிலையில் தேர்தலை நடத்துவது, பாதுகாப்பானது அல்ல என சுகாதார நிபுணர்கள் பரிந்துரைத்ததாக, அவர் தெரிவித்தார்.

அத்துடன், புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுக்கும் வரை, நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில், பொதுத் தேர்தலுக்கான திகதியை சவாலுக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை, இன்று காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 20 ஆம் திகதி, பொதுத் தேர்தலை நடாத்துவதாக அறிவித்து தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!