கொரோனாத் தொற்று எண்ணிக்கை, 1027 ஆக அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மேலும் 35 பேர், புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதனடிப்படையில் நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 27 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், 449 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

569 பேர் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகிய நிலையில், சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை இலங்கையில் 9 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!