காரைதீவு பிரதேச சபையின் 27 ஆவது அமர்வு!!

அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபையின் 27ஆவது மாதாந்த அமர்வு சபையின் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் இன்று கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்த உறவுகளுக்கு சபையில் இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட சென்ற மாத கூட்டறிக்கை ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. தொடர்ந்து சபையின் ஆரம்ப நிகழ்வாக கடந்த கால விடயங்கள் தொடர்பில் உறுப்பினர்களிடையே வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதுடன் இதில் சில உறுப்பினர்கள் தாம் தலையாட்டி பொம்மைகளாக இருக்கவில்லை எனவும் இங்கு ஊழல் மோசடிகள், முறைகேடுகள் நடைபெறவில்லை எனவும் குறிப்பிட்டனர்.

இதன் போது தவிசாளர் கிருஷ்ணப்பிள்ளை ஜெயசிறில் காரைதீவு பிரதேச சபையில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாக காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஆ.பூபாலரெத்தினம் உள்ளூராட்சி திணைக்களத்திற்கு கடிதங்களை அனுப்பி காரைதீவு பிரதேச சபைக்கு அவப்பெயரை தேடிக்கொடுப்பதோடு பிரதேசத்தின் அபிவிருத்திக்கு தடையாக இருப்பதாக சபையில் சுட்டிக்காட்டினார்.

இதன் போது எழுந்த உறுப்பினர் ஆ.பூபாலரெத்னம் தவிசாளர் தான்தோன்றி தனமாக கொண்டுவரும் பிரேரணைக்கு சபை உறுப்பினர்களை பகடைக்காய்களாக பயன்படுத்துவதாக சபையில் குற்றம் சுமத்தினார்.

நியாயமான செயற்பாடுகளுக்கான எமது மக்கள் பிரதிநிதிகள் சேவையாற்றும் உறுப்பினர்களையும், உத்தியோகத்தர்களையும் மோடிக்காரர்கள் என குற்றம் சுமத்துவது மன நோகடிக்கும் விடயமாகும். பிரதேச சபையின் அசையும், அசையா சொத்துகள் அவற்றின் பயன்பாடு குறித்து மக்கள் பிரதிநிதிகள் கள விஜயத்தை மேற்கொண்டு பார்வையிட வேண்டும் அப்போதுதான் சிறப்பான சேவையாற்ற முடியும் என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய தவிசாளர் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக கடிதங்களை உள்ளூராட்சி திணைக்களத்திற்கு அனுப்பி கௌரவ உறுப்பினர்களை களங்கப்படுத்த வேண்டாம் என சுட்டிக்காட்டி சபை நடவடிககையை நிறைவு செய்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!