சுனாமி நிதியை, மகிந்த அரசு தவறாகப் பயன்படுத்தியது : ரஞ்சன்!!

சுனாமி நிதியை முறையாக பயன்படுத்ததாது மகிந்தராஜபக்ச அரசாங்கம் நாட்டை ஏமாற்றியுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2004 சுனாமி பாதிப்பால் நாட்டுக்கு பாரிய நிதி உதவி கிடைத்தது, குறித்த நிதியை மகிந்தராஜபக்ச அரசாங்கம் முறையாக பயன்படுத்தாது களவாடி சொந்த கணக்கில் சேமித்து கொண்ட வரலாறே உள்ளது.

இந்த நிதி மோசடி தொடர்பில் வெளிப்படுத்தியவர் சரத் என்.டி.சில்வா, இந்த கருத்து தொடர்பில் எனக்கு வழக்கு பதிவு செய்ய கூடும்.

மேலும் எதிர்கட்சி என்பது ஆளும் கட்சிக்கு வால்ப்பிடிப்பது அல்ல, தவறுகளை சுட்டிக்காட்டுவதே ஆகும்.

அதைத்தான் நாங்களும் செய்து வருகிறோம் அந்தவகையில் ஆளும் தரப்பினர் தெரிவித்த போலி செய்திகளை பட்டியல் இடுகிறேன்,
ரோகித்த அபே குணவர்தன தெரிவித்தார் வெளிநாடு உதவிகள் கப்பலில் வந்துகொண்டு இருப்பதாக, மகிந்த அமரவீர தெரிவித்தார் மின்கட்டணம் பாவனையாளர் கணக்கில் தவறு நடந்துள்ளது, பவித்ரா வன்னியராச்சி தெரிவித்தார் ஏப்ரல் 19 நாடு வழமைக்கு திரும்பும், பந்துல குணவர்தன தெரிவித்தார் அமைச்சுகளின் செயலாளர்கள் அரச ஊழியர்கள் கிடையாது என.

இவ்வாறு ஆளும் கட்சி தெரிவிக்கும் போலி தகவல்களை நாங்கள் கேட்க கூடாதா மக்களே!

உலக சந்தையில் ஏற்ப்பட்டுள்ள மசகு எண்ணெய் விலை குறைப்பை மக்களுக்கு வழங்காது இருபதன் காரணம், மக்கள் கண்டபடி ஊர் சுத்துவார்கள் அதனாலேயே நாங்கள் விலை குறைப்பை மக்களுக்கு வழங்காமல் இருக்கிறோம் என உதயன் கம்மன்பில தெரிவித்து இருக்கிறார்

ஆளும் தரப்புகள் எங்களை எவ்வளவு விமர்சித்தாலும் நாங்கள் மக்கள் வழங்கும் வரிக்கு உண்னமயாக நடப்பதை வெளிப்படுத்துவோம் அதுவே எமது நோக்கம். என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!