நுவரெலியா வுட்லன்ட் பகுதியில் மண்சரிவு!!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், வுட்லன்ட் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இச்சம்பவம் இன்று பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக, ஒரு வழிப்போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றது.

மத்திய மலைநாட்டில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால், பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, ஹட்டன் – கொழும்பு, ஹட்டன் – கண்டி வீதிகளை பயன்படுத்தும் சாரதிகளை, மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு, போக்குவரத்து பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை, ஹட்டன் – கொழும்பு, ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதிகளில், தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால், மண்சரிவு அபாயம் காணப்படுவதால், அந்த வீதிகளை பயன்படுத்தும் சாரதிகளை, மிக அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு, பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!