நுவரெலியாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நபர் படுகாயம்!!

நுவரெலியா கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டப் பகுதியில், நீரில் அடித்துச் செல்லப்பட்ட நபர் ஒருவர், படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெய்து வரும் அடை மழை காரணமாக, ஆடுகள் இருந்த பட்டி மீது, மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

அதனையடுத்து, பட்டிக்குள் இருந்த ஆடுகளை காப்பாற்றுவதற்காக, குறித்த நபர் சென்றுள்ளார்.

எனினும், வெள்ளம் பெருக்கெடுத்ததால், மூன்று ஆடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

அவரும் தவறி நீரில் விழுந்துள்ளார்.

எனினும், விரைந்து செயற்பட்ட பிரதேச மக்கள், அவரைக் காப்பாற்றி, வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!