11 ஆவது யுத்த வெற்றி கொண்டாட்டம்!!

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில், 11 ஆவது போர் வெற்றி தினம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், இன்று மாலை நடைபெற்றது.

நாடாளுமன்றத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள, தேசிய இராணுவ வீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில், நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா, பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன மற்றும் அமைச்சர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர்.

வழமையாக, இராணுவ அணிவகுப்புகள், போர் நினைவு நிகழ்வுகள் என விமர்சையாக கொண்டாடப்பட்டாலும் கூட, கொவிட்-19 வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக, சமூக ஒன்றுகூடல் குறித்த அச்சுறுத்தல் காணப்படும் நிலையில், ஆடம்பரமில்லாது அமைதியான முறையில் போர் வெற்றி தினம் நடத்தப்பட்டதாக, அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இன்றைய போர் வெற்றி தினத்தில், இராணுவத்தின் 14 ஆயிரத்து 617 பேருக்கு பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில், இராணுவ வரலாற்றில் இடம்பெற்றுள்ள பதவி உயர்வு நிகழ்வுகளில், ஒரு நாளில் அதிக இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய நிகழ்வு இதுவாகும்.

நாட்டின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும், இராணுவ வீரர்களுக்கு வழங்கும் கௌரவமாக, இந்த பதவி உயர்வு வழங்கப்படுவதாக, பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!