மட்டக்களப்பு ஏறாவூரில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு ஏறாவூர்-5 ஆம் குறிச்சி பொதுமக்கள் இன்று மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் ஏறாவூர் நகர சபை முதல்வர் ஐ.அப்துல் வாசித் வழங்கிய வாக்குறுதியையடுத்து கைவிடப்பட்டது.ஏறாவூர்ப் பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் வாவியோரம் கொட்டப்படுவதை நிறுத்துமாறுகோரி இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

வாவியோரம் குப்பைகள் கொட்டப்படுவதனால் வாவி நீர் மாசுபடுவதுடன் அருகிலுள்ள கிராம மக்கள் துர்நாற்றத்தினால் சுகாதார சீர்கேட்டுக்குள்ளாவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏறாவூர்- 5 ஆம் குறிச்சிப் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்வதுடன் பாடசாலை, ஆலயங்கள் என்பனவும் அமைந்துள்ளன.

குப்பைதிடலிலிருந்துவரும் துர்நாற்றத்தினால் பாடசாலை மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

குப்பைத்திடலிலில் கொட்டப்படும் ஆடு, மாடு மற்றும் கோழி போன்ற பிராணிகளின் கழிவுகளை காகங்கள் தூக்கிவந்து குடிநீர்க்கிணறு மற்றும் குடியிருப்பு வளாகத்திலும் போடுவதனால் பெரும் அளெசகரியம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகைதந்த நகர சபை முதல்வர் ஐ.அப்துல் வாசித் இக்குப்பைகளை குழியில் இட்டு துர்நாற்றம் பரவாமல் இரசாயன திரவம் ஊற்றி மூடிவிட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!