யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தவர்களுக்கு நன்றி : வீரகுமார

30 ஆண்டுகளாக இடம்பெற்ற யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து 11 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் நாம், போரின் போது பங்கு கொண்டவர்களுக்கும் மற்றும் உயிர் நீத்தவர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாக முன்னாள் பாரளுமனற உறுப்பினர் வீரகுமார திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனாவில் தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பில் கலந்துக்கொகண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

இலங்கை கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாதுகாப்பற்ற தேசமாகவே காணப்பட்டது.

நாம் இன்று இவ்வாறு நடத்தும் ஊடக சந்திப்புகளை போல் அன்று நடத்த முடிவதில்லை.

பஸ்கள் மற்றும் புகையிரதங்களில் பயணம் செய்வதென்பது பாதுக்காப்பாக இருக்கவில்லை.

இவ்வாறு இருந்த நாட்டை தற்போதைய ஜனாதிபதி பிரதமர் மற்றும் முப்படையினர் பாரிய சிரமங்களுக்கு மத்தியில் ஒரு வழிப்படுத்தி யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

இன்று நாம் நிம்மதியாக இருப்பதற்கு நிச்சயம் அவர்களே காரணமாகும்.

அவர்களை நாம் ஒரு போதும் மறந்து விட கூடாது என்பதோடு நன்றிகள் கூறவும் கடமைப்பட்டுள்ளோம்.

நாட்டை பாரிய நெருக்கடிக்குள்ளிருந்து 11 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் மீட்டெடுத்தோம் என்பதை எமது எதிர்த்தரப்பினர் மறந்து செயற்படுகின்றனர்.

அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அரசியல் இலாபம் தேடிக்கொள்வது மட்டுமே.

இவ்வாறான ஒரு மகிழ்ச்சிச்சியான் தினம் என்பதெல்லாம் அவர்களுக்கு நினைவில் இருக்காது.

உண்மையில் அவர்கள் அன்று செய்த தவறே யுத்தம் பல காலங்கள் நீண்டு செல்வதற்கு முக்கிய காரணமாகும்.

இந்த நிலையில் அவர்கள் இன்றும் அதே போல் தான் செயற்பட்டு வருகினறனர்.

எமது ஆட்சிக்காலத்தில் எம்மால் மக்களுக்கு செய்யப்பட்ட அனைத்தையும் மறைத்து அவர்களின் அரசியல் நோக்கங்களை மட்டுமே பேசிக்கொண்டிருக்கின்றனர்.

இன்று நாட்டில் கொரோனா வைரஸுக்காக ஜனாதிபதி ,பிரதமர் ,சுகாதார மற்றும் பாதுகாப்பது பிரிவினர் சேவையாற்றி வருகின்ற நேரத்திலும் எதிர்தரப்பினால் நாட்டுக்கு என்ன செய்யப்பட்டதென்பது ஒரு இடைவெளியாகவேயுள்ளது.

உண்மையில் அவர்கள், குறித்த வைரஸினை வைத்தும் தமது அரசியலை இலாபங்களை மட்டுமே தேடிக்கொள்கின்றனர். என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!