மாவை சேனாதிராஜாவுக்கும், முன்னாள் போராளிகளுக்குமிடையில் சந்திப்பு!

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனதிராஜாவிற்கும், முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினருக்கும் இடையில், இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில், இன்று விசேட சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது நாட்டின் சமகால நிலவரம் தொடர்பாக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.

கலந்துரையாடலின் பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தை விமர்சித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான கண்டன அறிக்கையை, முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினர், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரிடம் கையளித்தனர்.

அத்துடன், குறித்த கண்டன அறிக்கை, ரெலோ கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனிடமும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!