சீரற்ற காலநிலை: 1433 பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்றைய தினம் மாத்திரம் 436 குடும்பங்களைச் சேர்ந்த 1433 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.கிழக்கு மாகாணத்திலேயே அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக, குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் நேற்றைய தினம் 178 குடும்பங்களைச் சேர்ந்த 685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 253 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 425 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வட மாகாகணத்தின் முல்லைதீவு மாவட்டத்தில் எட்டு பேரும், வவுனியா மாவட்டத்தில் 37 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 95 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!