எதிர்க்கட்சிக்குத் தகுதியில்லை : டிலான்!

ஐ.ஓ.சி பெற்றோல் விலை அதிகரிப்பு தொடர்பில் எதிர் கட்சிக்கு பேச தகுதி இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்ப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐ.ஓ.சி நிறுவனம் இலங்கையில் வியாபார நடவடிக்கையை தொடர்வதை எதிர்த்து பாராளுமன்றத்தில் ஐ.ஓ.சி மற்றும் அரசாங்கத்து இடையிலான ஒப்பந்தத்தை கைவிடுமாறு அன்றே தெரிவித்தோம்.

விலை அதிகரிப்பு தொடர்பில் சுயமாக தீர்மானம் எடுப்பதால் அரசாங்கத்துக்கு அது பாரிய சவாலாக அமையும் என தெரிவித்தோம்.

அந்த சவாலை இன்று புதிய அரசாங்கம் சந்தித்துள்ளது, இப்போது விலை உயர்வு தொடர்பில் எதிர்ப்பு தெரிவிக்க எதிர்கட்சிக்கு தகுதி இல்லை

இந்த நேர்தத்தில் மக்களுக்கு தெரிவித்துகொள்கிறோம் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிரப்பும் நிலையங்களில் பெற்றோல் கொள்வனவு செய்யுங்கள்.

அரசுக்கு சொந்தமான லங்கா டீசல் நிறுவனத்தில் விலை உயரவில்லை ஐ.ஓ.சி நிறுவனம் ஐக்கிய தேசிய கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு அமைய தான்தோன்றி தனமாக நடந்து கொண்டமைக்கு மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.

ஐ.ஓ.சி நிறுவனத்தில் எண்ணெய் கொள்வனவு செய்வதை நிறுத்துவதால் ஏற்படும் நட்டம் சரியான பதிலடியாக இருக்கும்.

ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சிக்கு கொண்டுவர அன்று மூட்டை மூட்டையாக பணம் கொடுத்து ஆட்சியமைக்க ஐ.ஓ.சி நிறுவனம் உதவியும் செய்தது.

கடந்த ஆச்சியாளர்கள் செய்த தவறுகளை தற்போதைய ஆட்சியாளர்கள் மீது சுமத்த வேண்டாம்.

இந்த நிலைமைக்கு ஐக்கிய தேசிய கட்சியே பதில் தரவேண்டும். என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!