நுவரெலியா தரவளை மேல் பிரிவு தோட்டத்தில், 61 பேர் பாதிப்பு!!

நுவரெலியா டிக்கோயா, தரவளை மேல் பிரிவு தோட்டத்தில், 11 வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ள நிலையில், 61 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
ஹட்டன் – டிக்கோயா ஆறு பெருக்கெடுத்த நிலையில், இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

மலைநாட்டில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சடுதியாக அதிகரித்து வருகின்றது.
ஆறுகளும் பெருக்கெடுக்க தொடங்கியுள்ளது.

இதனால் பல பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ள நிலையில், வீடுகளும் சேதமடைந்து வருகின்றது.

இந்த நிலையிலேயே, இன்று தரவளை மேல் பிரிவு தோட்டத்திலும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனால், இடம்பெயர்ந்த மக்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, பாதுகாப்பான இடமொன்றில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!