நுவரெலியா லொக்கீல் பகுதியில், 180 பேர் பாதிப்பு!!

அடை மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, நுவரெலியா கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட, கொட்டகலை, லொக்கீல் பகுதியில் 180 ற்கும் மேற்பட்;ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள நீர் புகுந்ததால், 50 ற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்தில், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள், கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந்த் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெள்ள நீர் வழிந்தோடக் கூடிய வகையில், கனரக வாகனங்களைப் பயன்படுத்தி வடிகான்கள் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் போது, கிராம உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும், சம்பவ இடத்துக்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!