தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மீண்டும் பாதிப்பு!

நுவரெலியா பொகவந்தலாவ ரொப்கில் வானகாடு தோட்டத்தில், கலாசார மண்டபத்திற்கு அருகாமையில், பாரிய மண்மேடு சரிந்து விழுந்துள்ளமையால், தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களை சேர்ந்த 51 பேரை, மீண்டும் பாதுகாப்பாக தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலையில் இருந்து பெய்த கடும் மழை காரணமாக, இந்த மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

தோட்டப் பகுதியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களை சேர்ந்த மக்கள், தோட்ட கலாசார மண்டபத்தில், ஒரு வருடத்திற்கு மேலாக தங்கி வந்த நிலையில், இன்று பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால், மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அனர்த்ததினால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும், மண்டபத்திற்கு அருகாமையில், மீண்டும் ஒரு பகுதி சரிந்து விழக்கூடிய அபாயம் காணப்படுவதாக, பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களை மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை, தோட்ட நிர்வாகம் முன்னெடுத்து வருகின்றது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!